அலுவலகத்தில் தாலாட்டு பாடலாமா?
அலுவலகத்தில் என்ன சிந்தனை தெரியுமா? இப்ப என் குழந்தை என்ன பண்ணிக்கிட்டு இருப்பான்?....
தத்தித் தத்தி ஓடுகிறானா இல்லை காப்பாளருக்குத் தொல்லை தராமல் தூங்குகிறானா?
காலையில் வழக்கம் போல் சாப்பிடாமல் துப்பி விட்டானே! மதியமாச்சும் ஒழுங்காச் சாப்பிட்டானா? ஒரு வேளை புதுப் பல்லு முளைக்குதோ?
மற்ற பிள்ளைகளோடு குஷியா விளையாடுறானா இல்லை வம்பு இழுக்கிறானா?
ச்சே என்ன இன்னிக்கு இவன் ஞாபகமாகவே இருக்கு!
முக்கியமான இ-மெயிலில் அட்டாச்மெண்ட் வைக்கமாலேயே மேலாண்மை இயக்குனருக்கும் மற்ற இயக்குனர்களுக்கும் அனுப்பி விட்டேனே! ச்சே! இப்ப இன்னொரு இ-மெயிலில் அசடு வழியணும்!
அந்த அட்டாச்மெண்டால் இந்த அட்டாச்மெண்டை கோட்டை விட்டோமோ?:-)
மாலை 5:00 மணி! CTRL+ALT+DEL
அவசரமாய் நண்பன் ஒருவன் என் அறைக்கு வர, "மச்சோ (மச்சியின் ஐரிஷ் ஆக்கம்), have to go now! see u tomorrow!!", என்று அடித்துப் பிடித்துக் கிளம்பி...
அமெரிக்காவில் பிறந்த என் அற்புதமே!
ஐந்துமணிக்கு மேல் நான் உனக்கு அர்ப்பணமே!!
அவசரமாய்த் தான் வர நினைத்திருந்தேன் அஞ்சுகமே! - அதற்குள்
அடிக்கடி சிக்னல் விழுந்ததால், கொஞ்சம் தாமதமே!!
என்ன ஒரே கவிதையா இருக்குன்னு பாக்கறீங்களா?
நம் பத்மா அரவிந்த் அவர்கள் தேன் துளியில், "ரவி, சுப்ரபாதம் வேகமாக போவது போல பிள்ளைத்தமிழ் இன்னும் வளரவில்லை போல் தெரிகிறதே" என்று ஆர்வத்தை அழகாத் தூண்டி விட்டுட்டார்!
"பிள்ளை"த்தமிழ் தானே! அதான்......தத்தித் தத்தி.......இதோ அடுத்த பதிவு!
இது இலக்கியப் பிள்ளைத்தமிழா? இல்லை
அமெரிக்கா வாழ் தமிழர்களின் பிள்ளைத்தமிழா?
பெற்றோர் பணி முடித்து வரும் வழியிலேயே குழந்தைக்குப் பாடும் தாலாட்டு!
நீங்களே பாருங்கள் ஒளி-ஒலிக் கவிதையை! (Please allow buffering time on slow PCs; A 7 min video)
மேலே கண்டது, இதயப் பூக்கள் என்னும் ஆல்பத்தில்,
New York அருள் வீரப்பன் அவர்கள் பாட்டாய் எழுதி,
முகுந்த் என்கிற Mux, லக்ஷணா இருவரும் பாடியது! இதோ அவர்கள் சுட்டி
சான் பிரான்சிஸ்கோ Bay Areaவில் இந்தியர்களிடையே பிரபலமான இந்திய இசைக்குழு! அனைவரும் Blogswara வலைத் தளத்தில் சிறப்பு சேர்ப்பவர்கள்!
இசைத்தமிழ்ப் பணி செய்பவர்களுக்கு அடியேனின் பாராட்டுக்கள்!
என்ன நண்பர்களே! பார்த்து மகிழ்ந்தீர்களா?
மாலை 5:00 மணி ஆச்சே! இன்னும் கிளம்பலையா வீட்டுக்கு?:-))
58 comments:
பாதி படம் பாத்துட்டேன் இரவி. நேரமாச்சு. வீட்டுக்குப் போய் வீட்டுல எல்லாரும் உக்காந்து இன்னொரு தடவை பாக்குறோம். :-)
பார்த்தேன். குழந்தைக்கு வாழ்த்துக்கள். இன்னும் விளையாட ஆரம்பித்துவிட்டால் அப்புறம் வீட்டில் இருக்க விரும்ப மாட்டார்கள்.மீனாட்சி பிள்ளைத்தமிழ் படித்தேன். இன்னும் ஒருமுறை நினைவூட்டலுக்கு நன்றி
அடி என்னடி நீ செய்யும் சின்ன சாஹசங்கள்
இடி மின்னல் போல என்னைத் தாக்கிடுதே
மடி கொஞ்சி விளையாடிடும் சிறு மன்னவளே
இனி என்றும் நான் உனக்கு அடிமையே!
[அமெரிக்காவில் பிறந்த என் அற்புதமே]
இதையும் சேர்த்துப் பாடுங்கள்!!
மிகவும் அருமையான பிள்ளைத் தமிழ்!
குழந்தைன்னு ஒண்ணு வந்துட்டாலெ நம்ம வாழ்வே மாறிப் போகுது இல்லை?
நம்ம உலகமே அவுங்களைச் சுத்தின்னு இருக்கறது எவ்வளவு உண்மை பாருங்க.
நல்லா இருக்குங்க கண்ணன்,
என்னோட வின்95 அலுவலக கணினி கொஞ்சம் தினறுது,வீட்டுக்குப்போய் மீதியை பார்க்கிறேம்.
நல்ல குரல் வளம் மற்றும் எடிட்டிங்.
இப்போது பார்க்கும் நேரம் காலை 8.37 இங்கு.
Birthday Boy SK ஐயா, வாங்க!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
"ஆத்திகம்" அன்பருக்கு
அழகான வாழ்த்துக்கள்!
"கசடறக்" கற்றவர்க்கு
கவின்மிகு வாழ்த்துக்கள்!
அழகான கவிதை கொடுத்திருக்கீங்க Birthday Treatஆக! நன்றி ஐயா!
//குமரன் (Kumaran) said...
பாதி படம் பாத்துட்டேன் இரவி. நேரமாச்சு.//
ஓகோ, மாலை 5:00 மணி! ctrl+alt+del ஆ குமரன்?
சரி வீட்டுக்குப் போய் பாத்துட்டுச் சொல்லுங்க! உங்க கருத்தை இல்ல! வீட்டில் உள்ளவங்க கருத்தை :-)))
//பத்மா அர்விந்த் said...
பார்த்தேன். குழந்தைக்கு வாழ்த்துக்கள்//
நன்றிங்க பத்மா!
//இன்னும் விளையாட ஆரம்பித்து விட்டால் அப்புறம் வீட்டில் இருக்க விரும்ப மாட்டார்கள்//
ஹா ஹா....சரியாச் சொன்னீங்க!! ஓடி விளையாடு பாப்பா தான்!
கே.ஆர்.எஸ்,
(நகைச்)சுவையாக இருந்தது படிக்க படிக்க ....!
:))
கண்ணபிரான், வாவ்!
என்ன அழகான எடிடிங், போட்டோகிராஃபி. ரொம்ப தொழில் சுத்தம். இதைத்தான் நான் புழக்கடை சினிமா என்கிறேன். இம்மாதிரி தரமான படங்கள் நிறைய வரவேண்டும். இந்த ஆல்பம் முழுவதும் எங்கு கிடைக்கும்? என்ன, சவுண்ட் கொஞ்சம் ஜாஸ்தி. காதைப் பிச்சுக்கிட்டு போவது (வால்யும் அடி பாதாளத்தில் வைத்தாலும்)!!
ஆபீசில் தாலாட்டு பாடலாம். ஆனால் நம் மடியில் யார் இருக்கிறார்கள் என்பதைப் பொருத்தது!:))
குமரகுருபரரின் பிள்ளைத்தமிழைப் பதிவிட்ட நீங்கள் இந்தப் பாடலில் உள்ள ஒரு (சிறு) குறையையைக் கவனிக்காமல் விட்டு விட்டிர்களே!
அமெரிக்காவில் பிறந்த அற்புதமே' என்று பாடல் துவங்கிறது.
அமெரிக்கா என்ன எந்த ஊரில் பிறந்த குழந்தையாக இருந்தாலும் அந்தக் குழந்தை அற்புதம்தான்
ஒப்புக்கொள்வீர்கள் என நினைக்கிறேன்
ரவி நல்ல பாட்டு.குழந்தைக்கு எங்கள் ஆசிகள்.அது சரி ஆபிஸில் சிலபேர் தூங்கும்போது தாலாட்டு பாடுவது தப்பேகிடையாது.
ரவி,உங்க ஆபீசிலத் தூங்கலாமுனு தெரியும்.
பாடவும் முடியுமா:-0)
நேரம் இல்லை.
மீண்டும் பார்த்துவிட்டு சொல்கிறேன்.
குழந்தைக்கு வாழ்த்துக்கள்.
ரவி,
பாட்டைக் கேட்க முடியவில்லை.
ஆனால் உங்க முன்னுரையே அழகாக இருந்தது.
குழந்தைக்கு வாழ்த்துக்கள்.
//துளசி கோபால் said:
உலகமே அவுங்களைச் சுத்தின்னு இருக்கறது எவ்வளவு உண்மை பாருங்க//
ஆமாங்க டீச்சர்; இதை ரொம்ப அழகாப் படமாக்கி இருக்காங்க! கடைசியில் அந்த மூன்று பெற்றோர்களும் காப்பகத்தின் முன்னால் நிற்கும் காட்சியைப் பாத்தீங்களா? ஏஏஏஏஏக்கம்!
//வடுவூர் குமார் said...
நல்லா இருக்குங்க கண்ணன்,
என்னோட வின்95 அலுவலக கணினி கொஞ்சம் தினறுது,வீட்டுக்குப்போய் மீதியை பார்க்கிறேம்//
எல்லாரும் சேர்ந்து பார்த்து எப்படி இருந்துச்சுன்னு சொல்லுங்க குமார் சார்!
//இப்போது பார்க்கும் நேரம் காலை 8.37 இங்கு//
அடடா...மாலை 5:00 மணிக்குத் தான் கிளம்ப முடியும் இல்லையா :-)
//கோவி.கண்ணன் [GK] said...
கே.ஆர்.எஸ்,
(நகைச்)சுவையாக இருந்தது படிக்க படிக்க ....!//
நன்றி GK ஐயா!
நகையும் சுவையுமா இருந்தது போல :-)))
// நா.கண்ணன் said...
கண்ணபிரான், வாவ்!
என்ன அழகான எடிடிங், போட்டோகிராஃபி. ரொம்ப தொழில் சுத்தம். //
ஆமாம் கண்ணன் சார்! ரொம்ப நல்லாச் செய்திருக்காங்க! இங்குச் சற்று பிரபலமும் கூட!
//இந்த ஆல்பம் முழுவதும் எங்கு கிடைக்கும்?//
சுட்டி கொடுத்திருந்தேனே சார்!
http://www.cdbaby.com/cd/mukund
சில பாடல்கள் சாம்பிள் தான் தந்துள்ளார்கள்; வாங்க வேண்டும் போல!
//Hariharan said...
ஆபீசில் தாலாட்டு பாடலாம். ஆனால் நம் மடியில் யார் இருக்கிறார்கள் என்பதைப் பொருத்தது!:))//
ஹை...ஆசையப் பாருங்க! :-)
மடிக் கணிணி ஒண்ணு எதுக்கு இருக்காம்!
//SP.VR.SUBBIAH said...
குமரகுருபரரின் பிள்ளைத்தமிழைப் பதிவிட்ட நீங்கள் இந்தப் பாடலில் உள்ள ஒரு (சிறு) குறையையைக் கவனிக்காமல் விட்டு விட்டிர்களே!
அமெரிக்காவில் பிறந்த அற்புதமே' என்று பாடல் துவங்கிறது.//
வாங்க சுப்பையா சார்! ரொம்ப நாளாச்சு நீங்க நம்ம வீட்டுக்கு வந்து!
ஒரு நல்ல வீடியோவை உங்களிடம் பகிர்ந்து கொள்ளத் தான் சார் இதைப் பதிவிட்டேன்; இது அலுவல் முடிந்து வீடு வரும் எல்லாப் பெற்றோருக்கும் பொருந்தும் தான்! இந்த ஆல்பம் கலிபோர்னியா தமிழருக்காகத் தயாரிக்கப்பட்டதால் அப்படி தொடங்குது போல!
//அமெரிக்கா என்ன எந்த ஊரில் பிறந்த குழந்தையாக இருந்தாலும் அந்தக் குழந்தை அற்புதம்தான்//
நிச்சயமாக ஐயா! அதில் என்ன ஐயம்!!
//தி. ரா. ச.(T.R.C.) said...
ரவி நல்ல பாட்டு.குழந்தைக்கு எங்கள் ஆசிகள்.//
மிக்க நன்றி திராச ஐயா!
//அது சரி ஆபிஸில் சிலபேர் தூங்கும்போது தாலாட்டு பாடுவது தப்பேகிடையாது//
விசிறியால் அடித்துப் பாடும் தாலாட்டோ:-)
ரவிசங்கர்
சுவாரசியமான பதிவு!!
அடிக்கடி இது மாதிரியும் பதிவிட்டு இரசிகர்களை மகிழ்விக்க வேண்டும் :) ..
//வல்லிசிம்ஹன் said...
ரவி,உங்க ஆபீசிலத் தூங்கலாமுனு தெரியும்.
பாடவும் முடியுமா:-0)//
அட எப்படி கரெக்டா கண்டு புடிச்சீங்க வல்லியம்மா? வங்கியில் ஸ்டாக் ஏறுமுகம், இறங்குமுகம் ஓகே! தூங்குமுகமா? :-)))
//நேரம் இல்லை.
மீண்டும் பார்த்துவிட்டு சொல்கிறேன்.
குழந்தைக்கு வாழ்த்துக்கள்//
குடும்பத்தோட பாருங்க! நன்றி வல்லியம்மா!
//வல்லிசிம்ஹன் said...
ரவி, பாட்டைக் கேட்க முடியவில்லை.
ஆனால் உங்க முன்னுரையே அழகாக இருந்தது.//
ஏன் வல்லியம்மா? Buffering problem or try in internet explorer if you are using firefox!
உங்களுக்கு மிகவும் பிடிக்கும்!
குழந்தைகள் வீட்டிலிருந்தாலே நேரம் போவதே தெரியாது. இங்கே எங்க டீம் லீட் குழந்தையை நாங்கள் தினமும் பார்த்துக்குவோம்... நேத்துதான் அவனுக்கு முதல் பிறந்த நாள்!!!
நன்றாக இருக்கிறது. மிகவும் ரசித்தேன்.
ரவி,
நல்ல அழகு தமிழில் சுவையாகச் சொல்ல வந்த சங்கதியைச் சொல்லியுள்ளீர்கள். இன்னும் படம் பார்க்கவில்லை. பார்த்த பின்னர் கருத்துச் சொல்கிறேன்.
/*அமெரிக்காவில் பிறந்த என் அற்புதமே!
ஐந்துமணிக்கு மேல் நான் உனக்கு அர்ப்பணமே!!
அவசரமாய்த் தான் வர நினைத்திருந்தேன் அஞ்சுகமே! - அதற்குள்
அடிக்கடி சிக்னல் விழுந்ததால், கொஞ்சம் தாமதமே!! */
அருமை.
நன்றி.
அருமையான படம்
ரொம்ப நல்லா இருக்கு. தந்ததுக்கு நன்றி
//இங்கே எங்க டீம் லீட் குழந்தையை நாங்கள் தினமும் பார்த்துக்குவோம்... //
நானும் கல்யாணத்துக்கு முன்னாடி இப்பிடி எல்லாம் செஞ்சவன் தான். ஆனா எனக்கு இப்படி நல்ல பசங்க டீம்ல அமையலையே?! சே. என் குழுவுல எல்லாருக்கும் கல்யாணம் ஆகி குழந்தை இருக்கு.
//அடிக்கடி இது மாதிரியும் பதிவிட்டு இரசிகர்களை மகிழ்விக்க வேண்டும் :) ..//
?????
:-))))
//பாடவும் முடியுமா:-0)
//
அம்மா. என்ன இப்படி கேட்டுட்டீங்க? எத்தனை தடவை பாட்டு பாடி மாட்டிக்கிட்டிருப்பேன் இங்க.
ஒன்னு பண்ணுங்க. பேசாம சிகாகோவில இருந்து மினியாபொலிஸ் கிளம்பி வாங்க. பாடறதென்ன? ஆடியே காமிக்கிறேன். :-)
//Sivabalan said:
ரவிசங்கர்
சுவாரசியமான பதிவு!!
அடிக்கடி இது மாதிரியும் பதிவிட்டு இரசிகர்களை மகிழ்விக்க வேண்டும் :) ..//
வாங்க சிபா! நன்றிங்க!
//இது மாதிரியும் பதிவிட்டு// - ஒண்ணுமே புரியலையேங்களே சிபா! :-))என்ன சொல்றீங்க?? எது சொல்றதா இருந்தாலும் எங்களுக்கும் நாலு போண்டா கொடுத்துட்டுச் சொல்லுங்க! உங்க வீட்டு போண்டாவின் சுவை இப்ப talk of the town ஆகி விட்டதே!
கீழே பாருங்க, குமரனும் கேள்விக்குறி போட்டுச் சிரிக்கறாரு:-)
//வெட்டிப்பயல் said...
குழந்தைகள் வீட்டிலிருந்தாலே நேரம் போவதே தெரியாது. இங்கே எங்க டீம் லீட் குழந்தையை நாங்கள் தினமும் பார்த்துக்குவோம்...//
நூறாவது நாள் கண்ட நெல்லிக்காய் வள்ளலே! வருக!
என்னாது..தினமும் பார்த்துக்குவீங்களா? அடடா...நீங்கள் அல்லவோ டீம் லீடரின் அத்யந்த சிஷ்யர்!
//நேத்துதான் அவனுக்கு முதல் பிறந்த நாள்//
Happy Birthday குட்டி! குழந்தை பேர் என்னவோ!
பரிசு கொடுத்தீங்களா பாலாஜி மாமா? :-)
//G.Ragavan said...
நன்றாக இருக்கிறது. மிகவும் ரசித்தேன்//
ஜிரா
நன்றாக இருக்கிறது. மிகவும் ரசித்தேன்!
அட, உங்க ப்ரொபைல் படத்தைச் சொன்னேங்க!
டெய்லி கெட்டப்பை மாத்தறீங்க போல இருக்கு! என்னா ஏதுன்னு இளாவை விசாரிக்கணும்! :-))
//வெற்றி said...
ரவி,
நல்ல அழகு தமிழில் சுவையாகச் சொல்ல வந்த சங்கதியைச் சொல்லியுள்ளீர்கள்.//
வாங்க வெற்றி!
முதல் வருகை! நல்வரவு!
நன்றியும் கூட!
//இன்னும் படம் பார்க்கவில்லை. பார்த்த பின்னர் கருத்துச் சொல்கிறேன்//
அவசியம் பாருங்க! பதிவை விட படமே அருமை!
//ஜெயஸ்ரீ said...
அருமையான படம்
ரொம்ப நல்லா இருக்கு. தந்ததுக்கு நன்றி//
ஜெயஸ்ரீ வாங்க! உங்களுக்குப் பிடிக்கும் என்று எனக்குத் தெரியும்! Glad you enjoyed it!
//என்னா ஏதுன்னு இளாவை விசாரிக்கணும்! :-))
//
எந்த இளாவைச் சொல்றீங்க? இராகவன், இளான்னு ஒரே நேரத்துல சொன்னா வேட்டையாடு விளையாடு கதாபாத்திரங்கள் தான் நினைவுக்கு வருது. :-)
//என்னா ஏதுன்னு இளாவை விசாரிக்கணும்! :-))
//
எந்த இளாவைச் சொல்றீங்க? இராகவன், இளான்னு ஒரே நேரத்துல சொன்னா வேட்டையாடு விளையாடு கதாபாத்திரங்கள் தான் நினைவுக்கு வருது. :-)
//குமரன் (Kumaran) said:
நானும் கல்யாணத்துக்கு முன்னாடி இப்பிடி எல்லாம் செஞ்சவன் தான். ஆனா எனக்கு இப்படி நல்ல பசங்க டீம்ல அமையலையே?! சே. என் குழுவுல எல்லாருக்கும் கல்யாணம் ஆகி குழந்தை இருக்கு//
கவலையை விடுங்கள் குமரன்; பாலாஜி கிட்ட சொன்ன ஒரு வழி பிறக்காதா என்ன? எல்லாம் (எல்லாக் குழந்தையும்) அந்த பாலாஜி பாத்துக்க மாட்டானா(ரா) என்ன? :-))
//குமரன் (Kumaran) said...
//அடிக்கடி இது மாதிரியும் பதிவிட்டு இரசிகர்களை மகிழ்விக்க வேண்டும் :) ..//
?????
:-))))//
குமரன்
நல்ல நண்பரா உதவிக்கு வந்தீங்க! நன்றிங்க!
சிபா இப்ப என்ன சொல்றீரு?:-)
//குமரன் (Kumaran) said...
ஒன்னு பண்ணுங்க. பேசாம சிகாகோவில இருந்து மினியாபொலிஸ் கிளம்பி வாங்க. பாடறதென்ன? ஆடியே காமிக்கிறேன். :-)//
அடடா, குமரன் எனக்கு அந்தப் பாக்கியம் எப்போது?
சிவ தாண்டவம் தெரியும்!
குமர தாண்டவம் பாத்ததே இல்லியே!
குமரன், நாளை கைசிக ஏகாதசி!
இந்த தாண்டவம்/அரையர் சேவை பற்றி ஒரு பதிவு இன்று மாலை வருகிறது!
//குமரன் (Kumaran) said...
இராகவன், இளான்னு ஒரே நேரத்துல சொன்னா வேட்டையாடு விளையாடு கதாபாத்திரங்கள் தான் நினைவுக்கு வருது. :-)//
ஹலோ ஜிரா! குமரன் என்ன சொல்றாரு பாருங்க! இதுக்குத் தான் வே.வி.க்கு விமர்சனம் எழுதாதீங்கன்னு சொன்னாங்க! :-)))
//Happy Birthday குட்டி! குழந்தை பேர் என்னவோ!
பரிசு கொடுத்தீங்களா பாலாஜி மாமா? :-)//
தாமன்...
அவரை போன வாரம்தான் ஃபிலில அவுங்க அத்தை வீட்ல விட்டுட்டு வந்தாரு. க்ரிஸ்மஸ் முடிஞ்சிதான் வருவாரு. அவர் இல்லாம ரொம்ப போர் :-(
வந்ததுக்கப்பறம்தான் பார்ட்டி... அப்ப கண்டிப்பா கொடுப்போம் ;)
இருந்தா என் லேப் டாப், செக்யூர் ஐடி தான் அவருக்கு விளையாட்டு சாமான். அப்பறம் என் செல் போனை கொண்டு போய் கரெக்டா குப்பை தொட்டில போட்டுடுவார் :-))
அதே மாதிரி நான் இந்தியால இருக்கும் போது எங்க அக்கா குழந்தை வீட்டுக்கு வந்தானா நான் லீவு போட்டுட்டு போயிடுவேன்...
இப்ப நல்லா பேசவும் ஆரம்பிச்சிட்டார். போன தடவை போன் பண்ணப்ப "மாமா நீ கள்ளக்குறிச்சிக்கு வரவே மாட்டியா?"னு கேட்டார். என்ன சொல்றதுனே தெரியலை. "சீக்கிரம் வரேன் சாமி"னு சொல்லி வெச்சிட்டேன் :-)
ரவிசங்கர் & குமரன் சார் ,
கமன்ட் போட்டா இரசிக்கனும் ஆராயக்கூடாது.. Ha Ha Ha...
//Sivabalan said...
ரவிசங்கர் & குமரன் சார் ,
கமன்ட் போட்டா இரசிக்கனும் ஆராயக்கூடாது.. Ha Ha Ha...//
சிபா...ம்ம்ம்ம்ம்மாட்டிக்கனீங்க!
வெட்டிப்பையலாரே! உங்கப் பதிவின் Mottoவை சிபா சுட்டு விட்டார் பாருங்கள்! :-)) Patent எல்லாம் பத்திரமா இருக்குல! சிகாகோவில் போய் ஒரு பிடி பிடிப்போம் :-)
//குமரன் (Kumaran) said:
நானும் கல்யாணத்துக்கு முன்னாடி இப்பிடி எல்லாம் செஞ்சவன் தான். ஆனா எனக்கு இப்படி நல்ல பசங்க டீம்ல அமையலையே?! சே. என் குழுவுல எல்லாருக்கும் கல்யாணம் ஆகி குழந்தை இருக்கு//
பேசாம பாஸ்டன் வந்துடுங்க... நாங்க பார்த்துக்கறோம் :-)
//சிபா...ம்ம்ம்ம்ம்மாட்டிக்கனீங்க!
வெட்டிப்பையலாரே! உங்கப் பதிவின் Mottoவை சிபா சுட்டு விட்டார் பாருங்கள்! :-)) Patent எல்லாம் பத்திரமா இருக்குல! சிகாகோவில் போய் ஒரு பிடி பிடிப்போம் :-)//
அதுவே நம்ம PKSல வர டயலாக் தானே! அதனால சிபா தாராளமா பயன்படுத்தி கொள்ளலாம் ;)
azhagaana video. nandri
Muthu,SFO
Can you tell me where to download this video from google videos?
We all watched it at home and all liked it.
Thanks
Pratik
Hello All,
This is Mukund and Lakshana is my daughter. Thanks for your comments.
KRS thanks for sharing Americavil video with everyone.
My goal was to just musically share Arul's great lyrics which were so relevant to the current status of Indian parents in the US.
I'm glad you all liked it.
You can watch the whole video at http://www.muxonline.com/
and if you wish buy the CD at http://www.cdbaby.com/mukund/
Nandri Vanakkam!
Anbudan,
-Mukund
பாட்டு கலக்கலா கீதே...
New York அருள் வீரப்பன்,
முகுந்த் என்கிற Mux, லக்ஷணா.... உங்களுக்கு ஒரு ராயல் சல்யூட் வெச்சிக்கிறேன்....
அனானி...
முத்து மற்றும் Pratik,
வருகைக்கு நன்றி!
//அரை பிளேடு said...
பாட்டு கலக்கலா கீதே...
New York அருள் வீரப்பன்,
முகுந்த் என்கிற Mux, லக்ஷணா.... உங்களுக்கு ஒரு ராயல் சல்யூட் வெச்சிக்கிறேன்....//
நன்றி அரை பிளேடு!
// Mux said...
KRS thanks for sharing Americavil video with everyone.
My goal was to just musically share Arul's great lyrics which were so relevant to the current status of Indian parents in the US.
I'm glad you all liked it.//
Yes Mux,
We all liked it! In fact I wanted to send you an email from your website about this post. Glad u came in!
Our best regards to Lakshana!
//You can watch the whole video at http://www.muxonline.com/
and if you wish buy the CD at http://www.cdbaby.com/mukund/
சுட்டியும், பதிவில் கொடுத்துள்ளேன் முகுந்த்!!
தொடர்ந்து மழலைப் பாடல்களை தாங்க..இந்த வலைப்பதிவு ரொம்ப பிடிச்சிருக்கு..என் கூகுள் ரீடரில் சேர்த்திருக்கிறேன்
ரவி,
இன்று தான் நிம்மதியாக இருந்து முழுப் பாடலையும் கேட்டு/பார்த்து இரசித்தேன். மிகவும் அழகாகப் படமாக்கியுள்ளார்கள். பாடியவரின் குரல்வளமும் கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது. பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றிகள்.
வெற்றி
Post a Comment