முன்னுரை
நண்பர்களே!
தமிழ்மணம் linkஐத் தவறுதலாக எடுத்துக் கொண்டது!
இதோ, இது தான் இப்போது பதிப்பித்த பதிவு!
நாட்டுப்புறத் தாலாட்டு: கொல்லையிலே தென்னை வச்சி, குருத்தோலைப் பெட்டி செஞ்சி...
பிள்ளைத் தமிழ் வலைப்பூ பல நாட்களாக இருந்தும்,
இதன் முதல் இடுகையைத் தமிழ்மணம் இப்போது எடுத்துக் கொண்டது ஏனோ! :-)
காப்பு!
விநாயக வணக்கம்!!
இந்தப் வலைப்பூவில் பிள்ளைத்தமிழ் பாடல்கள் பலவற்றைச், சுவைக்கலாம் என்பது எண்ணம்!
தேனினும் இனிய தீந்தமிழில், பலாச்சுளைப் பாப்பாவின் பாடல்கள் என்றால் சும்மாவா?
உங்கள் அன்பும் ஆதரவும் வேண்டித் துவங்குகிறேன்!
9 comments:
சர்கரையை லட்டாகவோ,ஜிலேபியாகவோ,பொங்கலாகவோ எப்படி சாப்பிட்டாலும் இனிக்கும். அதுபோல்தான் உங்கள் எழுத்தும். எழுதுங்கள். சர்க்கரை பொங்கல் பார்சல் அனுப்பவும்
ஆகா திராச ஐயா,
இந்தப் பதிவு, தமிழ்மண விதிகளுக்காகப் போட்டது :-)
Minimum 3 posts, for a new blog to be submitted என்று அவர்கள் ஆட்டோமாட்டிக் புரோகிராம் சொல்லுதே :-(
என்ன செய்ய! அதுக்கு என்னைத் தெரியல போல! நானும் பள்ளிக்குப் புதுசு தானே :-))
வாழ்த்துகள் இரவிசங்கர்.
//குமரன் (Kumaran) said...
வாழ்த்துகள் இரவிசங்கர்.//
நன்றி குமரன்!
வற்றா கங்கை வெள்ளமென
மதுரத்தமிழில் விருந்தளிக்க
பற்றால் சுற்றம் அனைவரையும்
பரிவுடன் அழைக்கும்ரவிசங்கர்!
உற்றோமே ஆனோம், உவகையுடன்
ஓடிவந்தோம்
மற்றேது பணி காண்போம்
பிள்ளைத்தமிழ்மட்டும்போதுமே!
ஷைலஜா
ஆஹா,
அருமையான பணி!!! வாழ்த்துக்கள்!!!
//ஷைலஜா said...
வற்றா கங்கை வெள்ளமென
மதுரத் தமிழில் விருந்தளிக்க
பற்றால் சுற்றம் அனைவரையும்
பரிவுடன் அழைக்கும் ரவிசங்கர்!
உற்றோமே ஆனோம், உவகையுடன்
ஓடிவந்தோம்
மற்றேது பணி காண்போம்
பிள்ளைத்தமிழ்மட்டும்போதுமே!//
ஆகா, பதிவில் கவிதை கண்டுள்ளேன்; பின்னூட்டத்திலே அழகிய கவிதையா! அதுவும் கொஞ்சு தமிழில் மரபுக் கவிதை;
அமர்க்களம் போங்கள்!
மிக்க நன்றி ஷைலஜா!
//உற்றோமே ஆனோம், உவகையுடன்
ஓடிவந்தோம்//
திருப்பாவை வரிகள் தங்கள் கைவண்ணத்தில் தித்திக்கின்றன!!
//வெட்டிப்பயல் said...
ஆஹா,
அருமையான பணி!!! வாழ்த்துக்கள்!!!
//
நன்றி பாலாஜி!
தங்கள் ஊக்கத்தால் மேலும் தொடர்வேன்!!
இரண்டாவது பின்னூட்டத்தில் இருந்து இரண்டாவது பதிவாப் போட்டிருக்கலாமே!
எங்களுக்குச் சீக்கிரமே பிள்ளைத்தமிழின்பம் கிடைக்குமே!
வாழ்த்துகள்.
தி.ரா.ச. ஐயா இனித்ததற்கும், ஷைலஜா கவித்ததற்கும் மேலே என்ன சொல்ல!
:))
Post a Comment